முன்னாள் போராளிகளுக்காக மாதாந்தக் கொடுப்பனவில் 2000 ரூபா ஒதுக்க வேண்டும் –  ஈபிடிபியின் மாநகரசபை உறுப்பினர் றீகன் வேண்டுகோள்.

Untitled-2 copy Thursday, April 12th, 2018

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்துக்காக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் தமது மாதாந்தக் கொடுப்பனவில் 2000 ரூபா ஒதுக்க வேண்டும் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் புதிய ஆட்சிக்கான கன்னி அமர்வு நேற்றையதினம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் கூடியது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் யுத்தத்திற்கு முகங்கொடுத்த புலிகளின் உறுப்பினர்களும் இன்று வாழ்வாதார தேவைகளுக்காக நாளாந்தம் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் புலிகளின் உறுப்பினர்கள் பலர் கடும் வறுமை நிலையில் வாழ்ந்துவருவதனால் அவர்களது வாழ்வாதார தேவைகளுக்காக எம்மாலான ஒரு சிறு உதவியை நாம் முன்னெடுக்கும் முகமாக இன்று கூடியுள்ள  எமது சபையின் உறுப்பினர்கள் அனைவரும் மாதாந்தம் ரூபா 2 ஆயிரத்தை அவர்களது நலன்களுக்காக வழங்க முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஆன்மீன அபிவிருத்தியூடாக சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப  நடவடிக்கை - ஜனாதிபதி!
2022ஆம் ஆண்டு உலக உதைபந்தாட்டப்போட்டி கட்டாரில்!
நாடளாவிய ரீதியில் இன்புளுவென்சா நோயின் தாக்கம் தீவிரம்
ஒலிபெருக்கிப் பாவனையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு - நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றது தமிழர் ஆசிரிய...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள்!