முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம்!

Monday, August 15th, 2016
உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ தன்னுடைய வீட்டில் இடம்பெற்ற விபத்தொன்றினை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.

தற்போது அவரது உடல் களுபோவிலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சரத் அப்றூவுக்கு, கடந்த ஜனவரி மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: