முன்னாள் நீதவானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
Saturday, July 20th, 2019அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக யானை குட்டியை வைத்திருந்தமை தொடர்பில் பணித் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதவான் திலின கமகே உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளரான உபாலி பத்மசிறி, அந்தத் திணைக்களத்தின் எழுதுவினைஞர் பிரியங்கா சஞ்சீவனி மற்றும் அந்த யானைக் குட்டியின் முன்னைய உரிமையாளரான சந்திரரத்ன பண்டார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
போலியாக தயாரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி டுசகுராடு என்ற யானை குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்ததால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக கூறி சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Related posts:
உலகின் கடல்சார் பயிற்சியில் இலங்கை!
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது - அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு - எந்தவித இலாபமும் இதனூடாக கிடைக்காது என வலு...
|
|