முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஒரு வார கால இடைவெளிக்குள் கொலை செய்வதாக மிரட்டிய நபர் கைது!

Friday, November 24th, 2023

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு வார கால இடைவெளிக்குள் கொலை செய்வதாக மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 7 விஜயராம மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு எதிரில் நபர் ஒருவர் சத்தமிட்டு குழப்பம் விளைவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் இராணுவ சிப்பாயையே இவ்வாறு கைது செய்துள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

நபர் ஒருவர் ரவுடித்தனமாக  நடந்து கொள்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

மகிந்த ராஜபக்சவை ஒரு வார காலத்திற்குள் அடையாளம் தெரியாத வகையில் படுகொலை செய்வதாக குறித்த நபர் மிரட்டியுள்ளார.

பமுனுகம கிரிவெல ஹொரபவிட்ட, பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் தனது சகோதரியின் கிருலப்பனை வீட்டில் தங்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் ...
ஐநாவில் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையையும் தோற்கடிப்போம் - வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்ப...
பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை - தெல்லிப்பளையில் உணவு சட்டங்களை மீறிய பலருக்கு மல்லாகம் ...