முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் பதவி வழங்கும் பங்களாதேஷ் !

Thursday, March 16th, 2017

பங்களாதேஷ் சிட்டகொங்கில் அமைந்துள்ள ஆசிய பெண்கள் பல்கலைகழகத்தின் ஆலோசகர் சபையில் இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு பங்களாதேஷ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

குறித்த கோரிக்கை முன்னாள் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.Bill and Melinda Gates அறக்கட்டளை, IKEA அறக்கட்டளை போன்ற கூட்டாளர்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை கட்டியெழுப்பும் ஆசிய பெண்கள் பல்கலைக்கழகம், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட லிபரல் கலை பட்டத்தினுள் இலங்கை உட்பட மத்தியகிழக்கு நாடுகளில் திறன் கொண்ட பெண்களுக்கு சேவை வழங்கி தலைமைத்துவ வழியில் அழைத்து செல்கின்றது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள் பல்வேறு சமூக செயற்பாடுகளின் பின்னணியை கொண்டவர்கள். அவர்களில் அதிகமானோர் பல்கலைக்கழக வரத்தை பெற்ற குடும்ப உறுப்பினர்கள் என்பது விசேட அம்சமாகும்

Related posts: