முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் விபத்தில் பலி!

Saturday, August 19th, 2017

காவற்துறை சிறப்பு படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியும் முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் போதி லியனகே திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூளையின் நரம்பொன்று வெடித்துள்ள நிலையில், மாடிப்படியில் இருந்து வீழ்ந்த அவர் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் , இரண்டு தினங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக காவற்துறை ஊடக பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்திருந்தார்.அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(20) கண்டி ,கடுகஸ்தொடவில் இடம்பெறவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts: