முன்னாள் சட்டமருத்துவ அதிகாரியே தாஜூடினின் உடற்பாகங்களை திருடினார்!

Tuesday, September 6th, 2016

பிரபல ரக்பி வீரர் வாஸிம் தாஜூடினின் உடற்பாகங்களை கொழும்பின் முன்னாள் சட்டமருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகரவே திருடினார் என்று சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த உடற்பாகங்களை அவரே லொறி ஒன்றில் எடுத்துச்சென்றதாக சட்டமா அதிபர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் துலனி அமரசேகரவிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்,குறித்த உடற்பாகங்களை லொறியில் ஏற்றிச்சென்றதாக கூறப்படும் அரச பணியாளர் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் சார்பில் மன்றில் ஆஜரான அரச சட்டத்தரணி திலான் ரட்நாயக்க இந்த தகவல்களை வெளியிட்டார்.தாஜூடினின் உடற்பாகங்களை காணாமல் ஆக்கியமை தொடர்பில், சட்டமா அதிபர், தாக்கல் செய்துள்ள மனுவின் விசாரணை நேற்று ஆரம்பித்தபோதே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முன்னாள் சட்டவைத்திய அதிகாரி, ஆனந்த சமரசேகர தாக்கல் செய்துள்ள முன்பிணை மனு தொடர்பில் நீதிவான் எதிர்வரும் 9ஆம் திகதியன்று தமது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

thayudeen-680x365

Related posts: