முன்னாள் அமைச்சருக்குப் பிணை!
Monday, April 16th, 2018
முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே இவர் வாக்குமூலமொன்றை வழங்குவற்காக இன்று காலை காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே இவவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு 39 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தி கெரம் மற்றும் சதுரங்க விளையாட்டு பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கஅவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.
Related posts:
இன்றைய காலநிலை!
மக்கள் சேவையை நேசிப்புடன் மேற்கொள்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - தெல்லிப்பளை பனை தென்னை வள சங்க த...
இந்திய பெருங்கடல் பகுதியில் வெவ்வேறான இரு காற்று சுழற்சிகள் - வடக்கு கிழக்கில் கனமழை பெய்ய வாய்ப்பள்...
|
|