முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சட்ட நடவடிக்கை!

Thursday, March 2nd, 2023

யாழில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!

அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று பண்ணை மீன்சந்தை, நாவாந்துறை மீன்சந்தை, காக்கைதீவு இடங்களில் திடீர் பரிசோதனை மீன்சந்தை, சின்னக்கடை மீன்சந்தை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது

அவ்வேளையில் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

அத்துடன் இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை. நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களைப் வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களையும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என வர்த்தகர்கள்  நுகர்வோருக்கு நம்பகரமான சேவையை வழங்க முன்வர வேண்டும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: