முதல் 10 மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை 5 இலட்சத்து 70 ஆயிரத்தை அண்மித்துள்ளது – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Friday, November 4th, 2022

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5 இலட்சத்து 68 ஆயிரத்து 258 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இருந்து அதிகளவிலானோர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 194, 495 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: