முதல் மூன்று மாதங்களில் 698 பேர் பலி – வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை!

Thursday, June 6th, 2019

வருடத்தின் மார்ச் மாதம் வரை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 698 ஆக பதிவாகியுள்ளது. வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் குறித்த காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 849 ஆக பதிவாகியிருந்தது.

அதன்படி , இவ்வருடத்தின் குறித்த காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அந்த சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 216 பாதசாரிகளும் ,239  உந்துருளியாளர்களும் 40 பின்னிருக்கை பயணிகளும் , 51 சாரதிகளும் , 96 பயணிகளும் மற்றும் 56 துவிச்சக்கர செலுத்துனர்களும் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: