முதல் தடவையாக பெண் ஒருவர் நிலஅளவையாளர் நாயகமாக நியமனம்!

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பெண்மணி நிலஅளவையாளர் நாயகமாகக் சியாமளி சித்ரலேகா பெரேரா கடந்த 21 நியமனம் பெற்றுள்ளார்.
கி.பி.1800ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தின் 220 வருட வரலாற்றில் , இவர் 1800 லிருந்து கடமைபுரிந்த நிலஅளவையாளர் நாயகங்கள் வரிசையில் 50ஆவது இடத்தைப் பெறுகிறார்!
கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தில் பயின்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டம்பெற்ற பின் தியத்தலாவை அளவையியல் படமாக்கல் நிறுவகத்தில் பட்டப்பின்படிப்பைத் தொடர்ந்து நிலஅளவைத் திணைக்களத்தில் இணைந்து கொண்டார்.
அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று தனது 58ஆவது வயதில் அதன் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார்! எப்போதும் மலர்ந்த முகத்துடன் மனித நேயத்துடன் அனைவருக்கும் தொண்டாற்றும் அவர் நிலஅளவையாளர் நாயகமாக நிச்சயம் முத்திரை பதிப்பார் என நம்பலாம்.
Related posts:
தொழிலாளர் அமைப்புக்கு மருத்துவர் சங்கம் முறைப்பாடு!
வடக்கு – கிழக்கு பெண்களிடம் பாலியல் லஞ்சம் - ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தெரிவிப்பு!
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு கொடுப்பனவு – கல்வி அமைச்சு தீர்மானம்!
|
|