முதல் காலாண்டில் மின்சார சபைக்கு 5781 மில்லியன் ரூபா நட்டம்!

Sunday, July 24th, 2016

இவ் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 5781 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 மத்திய ஆண்டு அரச நிதி நிலைமை தொடர்பான அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 2015 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மின்சார சபைக்கு இந்த வருடம் 5781 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோவோட் மணித்தியால மின்சக்திக்கான உற்பத்தி செலவீனம் 2 ரூபா 47 சதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: