முதல்வருக்கு தமிழரசுக்கட்சி ஆப்பு: பதிவி விலகினார் சத்தியலிங்கம்!

Tuesday, August 8th, 2017

வட மாகாண சபையின் ஊழல் தொடர்பான சர்ச்சையால் ஏற்றபட்ட நெருக்கடியை அடுத்து அமைச்சரவை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடையே நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்தே அவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த முடிவு கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் உடனடியாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் மத்திய செயற்குழு, அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை உறுப்பினர்களுக்கு அறிவித்ததும், அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படகின்றது.

வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சத்தியலிங்கம் குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார் .

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் ஒன்றுகூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் தாம் முதலமைச்சரது முடிவுக்கே இவ்விடயங்களை விடுவதாகவும் அவருக்கு முழுமையான ஆதரவைகொடுப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென தமிழரசுக் கட்சியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் தமிழரசுக்கட்சியை ஓரங்கட்ட முயற்சிப்பதாக கூறப்படும் சர்ச்சைக்கு வலுச்சேர்த்துள்ளதாகவே அமைந்துள்ளது.

சுமார் நான்கு ஆண்டுகளை வெற்றுப் பேச்சுப் பேசி உருப்படியற்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழரசுக்க ட்சியும் தமிழ் மக்களுக்காக எந்தவொரு தேவையையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை. இதனிடையே இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் பதவிக்காகவும் தமது சுயநலன்களுக்காகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமிழரசுக்கட்சியும் மோதிக்கொண்டுள்ள நிலமையானது மிக வெட்கப்படடவேண்டிய ஒன்றாகவே அமைந்துள்ளது.

.

Related posts:

எரிபொருள் நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவ...
அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு காணி அளவிட்டுப்பணிகள் இடைந...
திறந்த விசா ஊடாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டாம் - தமிழ் மொழி பேசுபவர்களே பாதிக...