முதல்வரின் உத்தரவை மதிக்காது நடைபெற்று முடிந்த  பிரதி அவைத் தலைவர் தெரிவு!

Thursday, October 27th, 2016

 

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உத்தரவினையும் மீறி கடும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் புதிய பிரதி அவைத்தலைவராக வ. கமலேஷ்வரன்  தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் ம.அன்டனி ஜெயநாதன் கடந்த 1ஆம் திகதி மரணமடைந்ததைத்தொடர்ந்து  புதிய பிரதி அவைத்தலைவராக வ. கமலேஷ்வரன்  தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மதியம் 12 மணிக்கு பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டு 12.50 மணிக்கு வாக்கெடுப்புக்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டது.

இதற்கமைய வாக்களிப்பு இடம்பெற்று. இதில் கமலேஷ்வரனுக்கு 18 வாக்குகளும், அனந்தி சசிதரனுக்கு 13 வாக்குகளும் நடுநிலையாக 1 வாக்கும் அளிக்கப்பட்ட நிலையில் வ.கமலேஷ்வரன் புதிய பிரதி அவைத்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

“நான் வெளிநாட்டிலிருந்து வரும் வரை பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்யவேண்டாம், நான் வந்த பிறகு தெரிவு செய்கின்றேன்” என்று இலண்டனிலிருந்து முதல்வர் விக்கினேஸ்வரன் பிரதி முதலமைச்சர் குருகுலராஜாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்த உத்தரவை மீறி குறித்த தெரிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

northern provincil councial 66547

Related posts: