முதல்வரிடம் கருத்து கோரியுள்ளது கூட்டமைப்பு!

Monday, June 19th, 2017

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து கோரியுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனினால் எழுத்து மூலமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  வட மாகாண முதலமைச்சர் அண்மையில் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் எடுத்த தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது எதிர்ப்பு போக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வட மாகாண முதலமைச்சரின் பக்கம் உள்ள நியாயம் தொடர்பில் வினவப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.  எவ்வாறாயினும் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வருவதற்கு ஆதரவளித்தவர்கள் இன்றளவில் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

Related posts: