முதலீட்டுக்கான திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும்- பிரதமர்!

Tuesday, August 16th, 2016

நாட்டின் தேசிய பொருளாதார கொள்கை மற்றும் உள்நாட்டு வெளி நாட்டு முதலீட்டுக்கான அவகாசங்களை ஊக்குவிக்கும் திட்டங்களை விரைவில் வெளியிப்படவள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதான பல்தேசிய கம்பனிகள் நூறுக்குள்ளும் முதல்தர தொழில் முயற்சிகள் 500க்குள்ளும் உள்ளடங்கக்கூடிய சொங்ஜிங் வெளிநாட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்து ழைப்பு கம்பனியை சந்தித்தார். இங்கு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சொங்ஜிங் வெளி நாட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கம்பனி தலைவர் யு. யெங் இலங்கையின் திட்டம் வெளியிடப்படும் நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய எதிர்பார்க்கும் சொங்ஜிங் மாநகர முதலீட்டார்களை மேலும் ஊக்குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் நிர்மாணத்துறை செயற்பாட்டில் ஈடுபட தமது கம்பனி விருப்பத்துடன் உள்ளதாகவும் இங்கு டின்மீன், மாணிக்கக்கல், ஆபரண உற்பத்தி கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி பொருட்களை களஞ்சியப்படுத்தும் களஞ்சியசாலை என்பவற்றை அமைக்க உத்தேசிப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் சிறிய வர்த்தக சந்தையே உள்ளதால் உலகில் பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திட இலங்கை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன் போது குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இலங்கையூடாக மிகவும் பரந்த வர்த்தக சந்தைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் யீ சியென் லீ யெங்: ஆசியாவில் பாரிய பொருளாதார அபிவிருத்தியை எட்டும் இலங்கையின் நோக்கத்தை அடைய சீனா முழுமையாக உதவும் என்றார்

Related posts: