முதலீடுகள் ஊடாக பொருளாதாரத்தை திடமான நிலைக்கு கொண்டுவர முயற்சி!

Saturday, September 3rd, 2016

முதலீடுகள் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொட்டலங்க பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பொது மக்கள் சுயமாகவே தமது பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கான சூழல் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். எனவே கடன்கள் ஊடாக அல்லாமல் முதலீடுகள் மூலமாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

Related posts: