முதலீடுகளை அதிகரிக்க இந்தியா துணைநிற்கும் : பிரதமர்!
Tuesday, August 28th, 2018இலங்கையில் தமது முதலீடுகளை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்விற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் வீடமைப்பு, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்திகள் விடயத்தில் இந்தியா, இலங்கையில் முதலீடுகளை விரிவாக மேற்கொள்ளும் என்றும் சுஸ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை: தீர்மானிக்கும் பொறுப்பு பாட...
தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு!
இன்றும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது தபால் மூல வாக்களிப்பு!
|
|