முதலாவது கொரோனா அலையின் போது 7 வீதமானோர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர் – மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல்!

Saturday, February 5th, 2022

முதலாவது கொரோனா அலையின்போது நாட்டிலுள்ள ஊழியர்களில் 7% ஆனவர்கள் வேலையை இழந்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்துகிறது.

கொரோனா முதல் அலையின் தாக்கமானது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அறிக்கையின் மூலம் அவதானிக்கப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே விவசாயத் துறையில் 64.3% சுயதொழில் செய்வோர் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 14.6% வழமையான விளைபொருட்களை விற்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் சாராத சுயதொழில் செய்பவர்களில் 92.9 வீதமானோரின் வருமானம் குறைந்துவிட்டதாக அல்லது முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: