முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் நடைமுறைப் பயன்பாட்டை மார்ச்முதல் ஆரம்பிக்கத் நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Sunday, November 20th, 2022முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் நடைமுறைப் பயன்பாட்டை மார்ச் 2023 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
முன்பதாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் ஆரம்பமானது.
இதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 450 பயிற்றுவிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு முறையான பயிற்சிகளை வழங்கிய பின்னர், அவர்கள் முதலாம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளனர்.
இந்த மாகாண ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் பின்னர், 2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணை முதல் நடைமுறைச் செயற்பாடுகளின் அடிப்படையில் ஆங்கில மொழியைப் பயன்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் இந்த வாரம்!
மதத் தலைவர்களுக்கு கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அவசர கோரிக்கை!
வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு சில மாதங்களுக்கு மாதாந்தம் தொகையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வு ...
|
|