முதலமைச்சர் – சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் வவுனியாவில் மோதல்!

Monday, June 19th, 2017

முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோதலை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் வருகைதந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

மாத இறுதிக்குள் 12,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்!
பிரதமர் மஹிந்தவை வாழ்த்தியதன் மூலம் டக்ளஸின் அரசியல் நிலைப்பாடே சரியெனறு ஏற்றுக்கொண்டுள்ளார் சம்பந்த...
சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகள் போலியானவை – வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள மு...