முதலமைச்சர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அழைப்பு!
Friday, March 25th, 2016மாகாண சபை முதலமைச்சர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பை விடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம்(23) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி இது தொடர்பில் அறிவிப்பு விடுத்துள்ளார்
மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக பேச்சு வார்த்தைகளை நடத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இது விடயம் தொடர்பில் பேச்சுக்களை நடத்தி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை முதலமைச்சர்களை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|