முட்டை உற்பத்தியாளர்களை விட இடைத் தரகர்களுக்கு அதிக இலாபம் அடைகின்றனர் – அகில இலங்கை விலங்கு அபிவிருத்தி ஆலோசகர்கள் சங்கம் தெரிவிப்பு!

முட்டை உற்பத்தியாளர்களை விடவும், இடைத் தரகர்கள் தற்போது அதிக இலாபம் ஈட்டுவதாக அகில இலங்கை விலங்கு அபிவிருத்தி ஆலோசகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டீ.ஓ. நிஷாந்த குமார தெரிவித்துள்ளார்.
முட்டையின் விலை பற்றி சகல சந்தர்ப்பங்களிலும் பேசப்படுகின்றதே தவிர, உற்பத்தியாளரின் செலவு குறித்து பேசப்படுவதில்லை.
உற்பத்தியாளரிடமிருந்து, நுகர்வோருக்கு முட்டை கிடைக்கும் நிலை வரையான இடைவெளி குறித்த கவனம் செலுத்த வேண்டும்.
எனவே, இடைத்தரகர்களினால் ஏற்படும் இடைவெளியைக் குறைப்பதன் மூலம், முட்டை உற்பத்தி தொழிற்துறைக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்த முடியும் என அகில இலங்கை மிருக அபிவிருத்தி ஆலோசகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் கண்டறியப்பட்டால் கைதுசெய்யப்படுவர் !
முகநூலில் மலிவான விலை பொருட்களை பெற்றத்தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்!
வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு - தேர்தல்கள்...
|
|