முடிவுக்கு வந்தது வடமாகாணத் தொண்டராசிரியர்களின் போராட்டம்!

Wednesday, August 3rd, 2016

வடமாகாணப் பாடசாலைகளில் நீண்டகாலமாகப் பணியாற்றிய போதும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நேற்றுமன்தினம் (01-08-2016) ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று (01) மாலையுடன் குறித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

வடமாகாண ஆளுநர் மாலை 5.15 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைச் சந்தித்து இந்த வருட இறுதிக்குள் உங்களுக்கான நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாக உறுதியளித்ததன் பேரிலேயே குறித்த போராட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

உங்களின் விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் ஏற்கனவே தொலைபேசியில்  பேசியுள்ளேன்.  04.08.2016 அன்று ஐனாதிபதியை நேரில் சந்தித்து உங்களின் விடயத்தைத் தெளிவுபடுத்தி உரிய தீர்வு பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன். உங்களுக்கான நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தருவது என்னுடைய வேலையில்லை. ஆனாலும், நீங்கள் என்னை நம்பி வந்தகாரணத்தால் உங்களுக்கான நியமன விடயத்தை நான் பொறுப்பெடுதர்த்திருக்கிறேன்

உங்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை நான் நேற்றைய தினமே ஆரம்பித்து விட்டேன். எனக்கு இதற்காக நீங்கள் இந்த வருட நிறைவு வரை கால அவகாசம் வழங்க வேண்டும். நீங்கள் அடுத்த வருட ஆரம்பத்தில் நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் பெற்றுச் செல்லும் சூழலை உருவாக்குவேன் எனவும் வாக்குறுதியளித்தார். ஆளுநரின் உறுதிமொழியையடுத்து தொண்டராசிரியர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டு வருவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்குத் தண்ணீர்ப் போத்தல்களை வழங்கி ஆளுநர் போராட்டத்தை முடித்து வைத்தார்.

இதேவேளை,. உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் வேளை வரை  வடமாகாண முதலமைச்சர், கல்வியமைச்சர், ஏனைய அமைச்சர்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் செல்லவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Related posts: