“முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள் – எதிரணியிடம் அமைச்சர் ரோஹித சவால்!

Thursday, October 21st, 2021

“முடிந்தால் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள். அரசின் பலத்தைக் காட்டுகின்றோம்.”  என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சவால் விடுத்துள்ளார்.

அத்துடன், விவசாயிகளைப் பயன்படுத்தி எதிரணிகள் போராட்டம் நடத்துகின்றன எனவும், இதன் பின்னணியில் முழுமையாக அரசியலே இருக்கின்றது எனவும் ஊடகங்களிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் மக்களின் அமோக ஆணையால் அமைக்கப்பட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசை எவராலும் கவிழ்க்கவே முடியாது எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டை மீண்டும் யுகத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்குச் சிலர் முற்படுகின்றனர் எனவ அமைச்சர் நாமல் ராஜபக்ச ஜே.வி.பியினரை மறைமுகமாகச் சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: