முடிகிறது பொதுமன்னிப்பு காலம் – இராணுவப் பேச்சாளர்!

Saturday, July 9th, 2016

தப்பிச் சென்ற முப்படையினர் மீண்டும் சேவையில் இணைந்து கொள்ள வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் முடிவடைவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

11 ஆயிரத்து 847 இராணுவத்தினர், 679 கடற்படையினர், 525 விமானப்படையினர் சேவையை கைவிட்டு தப்பிச் சென்று சுதந்திரமாக நடமாடி திரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர், இவர்கள் சேவையாற்றிய படைப் பிரிவுகளுக்கு சென்று இணைந்து கொள்ளுமாறு படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களி்டம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மீண்டும் சேவைக்கு திரும்பாதவர்களை கைது செய்வதற்காக எதிர்வரும் 13ஆம் திகதியில் இருந்து விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவோம்! - ஜனாதிபதி
விரைவில் தொகுதிவாரி முறையில் தேர்தல் -ஜனாதிபதி!
முன்னாள் அமைச்சருக்குப் பிணை!
நாளை காலை 10 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானம் - புத்தசாசன அமைச்சு!