முடக்க நிலையிலிருந்து நாடு திறக்கப்பட்டதும் அடைவு கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்!

Monday, June 21st, 2021

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று காலைமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா நகருக்குள் நுழையும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வவுனியா நகரில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள் வங்கிகள் மதுபானநிலையங்கள் உட்பட அனைத்து வியாபார நிலையங்களும் இன்று திறக்கப்பட்டிருந்தன.

இதேவேளை மக்கள் தமது பணத்தேவையை பூர்த்தி செய்ய அடைவு வைக்கும் நிலையங்களில் அதிகமாக கூடி நின்றதையும் காணமுடிந்தது. இதனால் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் பல்வேறு தேவைகள் நிமித்தமும் அதிகமாக மக்கள் ஒன்று கூடியமையால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியாவிலிருந்து தனியார் மற்றும் அரச பேருந்துகள் வடக்கு மாகாண ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களிற்கு பின்பாக மதுபான நிலையங்கள் திறந்திருக்கின்றமையால் அதனை கொள்வனவு செய்வதற்கு மதுபான நிலையங்களின் முன்பாக அதிக கூட்டம் கூடியுள்ளது.

Related posts: