முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

Wednesday, August 11th, 2021

நாட்டில் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது எனவும் ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த சூழ்நிலையில் முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: