முச்சக்கர வண்டி மோதி விபத்து – நெல்லியடியில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்று துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வியட்நாம் இலங்கை கடற்றொழில் அபிவிருத்திக்கு உதவி!
கொரோனேகா வைரஸ்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,491 ஆக உயர்வு!
ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு துபாய் நிறுவனம் இணக்கம்!
|
|