முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சங்கம் நிதியமைச்சருடன் பேச்சு!

Sunday, November 27th, 2016

அகில இலங்கை முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கும் இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டிகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதி கூடிய வேகமான மணித்தியாலத்திற்கு 40 கி மீ என்ற வேக கட்டுப்பாடு மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றராக அதிகரிக்கப்பட வேண்டும் என முச்சக்கரவண்டி ஓட்டுனர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தாம் ஆராய்ந்து பதிலளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி திட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: