முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் மார்ச் 26 முதல் அதிகரிப்பு!

Thursday, February 22nd, 2018

முச்சக்கர வாகனம் மற்றும் அதன் உதிரி பாகங்களது விலை கடந்த காலங்களில் 150% அதிகரித்துள்ளதாகவும், எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி முதல் முச்சக்கரவண்டிக்கான கட்டணங்களை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் லங்கா சுய வேலைவாய்ப்பு ஊழியர்களது முச்சக்கர வாகன சங்கம் தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்பினால் முச்சக்கர வாகனங்களதும் அதன் உதிரிப் பாகங்களதும் விலை அதிகரித்துள்ள நிலையில், இதற்கான தீர்வு ஒரு மாத காலத்தினுள் கிடைக்கப்பெறாதவிடத்து மேற்குறித்த தீர்மானத்தினை மேற்கொள்ள நேரிடும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 26ம் திகதி முதல் இரண்டாவது Km இற்கு அப்பால் அறவிடப்படும் ரூ.40 ஆனது ரூ.50 ஆக அதிகரிக்கப்படும் என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால்முச்சக்கர வண்டி பயணிகளுக்கு வழங்கியிருந்த ஒரு சலுகையும் இல்லாது போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது முதல் Km இற்கு ரூ.50வும், இரண்டாம் Km இலிருந்து ரூ.40வும் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: