முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர் கட்டாயம்!

Monday, September 24th, 2018

இலங்கையில் அடுத்த மாதம் முதல் முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்திற்காக மீற்றர் கட்டாயமாக்கும் சட்டத்தை அடுத்த மாதம் அமுல்படுத்தப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

மீற்றர் பொருத்துவதற்காக வழங்கப்பட்ட அவகாச காலம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சட்டத்தை செயற்படுத்துவதற்காக பொலிஸாருக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் கொழும்பு வருவோருக்கு எச்சரிக்கை என்னும் தலைப்பில் தமிழ்வின் இல் முச்சக்கர வண்டிக்கான மீற்றர் தொடர்பில் செய்தி பிரசுரித்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர் கட்டாயமாக்கப்பட்டமை மக்கள் மத்தியில் சந்தோசமான தகவலாகவே கருதமுடிகிறது.

Related posts: