முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண மீட்டர் ஏப்ரல் 20 முதல் கட்டாயம்!

Tuesday, April 10th, 2018

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண மீட்டர் முறையினை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் கட்டாயப்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக சாலை பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டியின் சேவையின் தரத்தினை உயர்த்துதல் மற்றும் பயணிகள் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த முறைமை கடந்த முதலாம் திகதியில் இருந்து கட்டாயமாக்கப்பட்ட போதிலும், சாரதிகள் உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு அமைய காலக்கெடு வழங்கப்பட்டிருந்ததாகவும்தெரிவிக்கப்படுகின்றது.