முச்சக்கர வண்டிகளின் கட்டணம் 26ம் திகதி முதல் அதிகரிப்பு!

Saturday, February 24th, 2018

முச்சக்கர வண்டியின் உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பினால் வாடகை முச்சக்கர வண்டிகளின் குறைந்த கட்டணமான ரூபா.50 எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ரூபா.60 ஆகஅதிகரிக்கப்படும் என இலங்கை சுய தொழில் வல்லுனர்களது தேசிய முச்சக்கர வண்டிகள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 26ஆம் திகதி குத்தகை நிறுவனங்களால் முச்சக்கர வண்டிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் போலியான முச்சக்கரவண்டிகளது உதிரிப்பாகங்கள் குறித்தும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: