முச்சக்கரவண்டி மீது பெற்றோல் குண்டு தாக்குதல்: இரு முச்சக்கரவண்டிகள் எரிந்து நாசம்!

Thursday, November 29th, 2018
யாழ்.நகரில் 8 பேர் கொண்ட கும்பல் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் தரித்து விடப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்களில்  மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு ஆட்டோ எரிந்து சேதமாகியுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் வைமன் வீதியில் இன்று  அதிகாலை(29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆரியகுளம் சந்தியில் கராஜ் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கராஜ் உரிமையாளர் நேற்றுமுன்தினம் இரவு இரு ஆட்டோவையும் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார். 1.55 மணியளவில், பாரிய சத்தம் கேட்ட போது, வெளியே வந்த வீட்டு உரிமையாளர் 8 பேர் முகமூடியுடன், மேட்டார் சைக்கிளில் வந்ததையும், வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டனர்.
இரு முச்சக்கரவண்டி தீ பற்றி எரிந்ததுடன், இரு மோட்டார் சைக்கிள்கள் வாளால் வெட்டப்பட்டும், வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தாம் எவருடன் எந்த பிரச்சினைகளுக்கும் செல்வதில்லை என்றும், யார் இவ்வாறான சம்பவத்தை புரிந்ததென்றும் தெரியாது என வீட்டு உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: