முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவை சாரதிகளுக்கும் 5000 கொடுப்பனவு – அரசு தீர்மானம்!

முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் சாரதிகளுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறி்ப்பிடத்தக்கது.
இதேநேரம் காய்கறிகளையும் மரக்கறி வகைகளையும் தூரப் பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்காக புகையிரதங்களை பயன்படுத்துவதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர் புகையித திணைக்கள மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|