முச்சக்கரவண்டி பதிவில் புதிய மாற்றம்!

முச்சக்கரவண்டி பதிவுகள் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் இதுவரையில் சுமார் 12 இலட்சம் முச்சக்கரவண்டிகள் மாத்திரம்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் 35 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு மாத்திரம் வாகன போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கானசட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது முச்சக்கரவண்டி பதிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான காரணமாக இருக்கலாம்என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
மேலும் 2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களின் வாகன பதிவுகள் சுமார் 45 ஆயிரத்தினால்குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது 20 வீதத்தால் முச்சக்கரவண்டி பதிவுகளும்குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வறுமை ஒழிப்பு ஆண்டாக 2017ஆம் ஆண்டு பிரகடனம்? - ஜனாதிபதி
நாட்டின் புதிய அரசியலமைப்பை தீர்மானிப்பது முதலமைச்சரல்ல: பிரதமர் !
நாட்டில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட மாற்றம்!
|
|