முச்சக்கரவண்டி தொடர்பில் விரைவில் புதிய சட்டம்!
Friday, July 7th, 2017
35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யப்படவுள்ளது. இது தொடர்பான சட்டம் தற்போது தயாராகி வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் அதிகமாக முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார். பயணிகள் தங்கள் போக்குவரத்திற்கு அதிகமாக முச்சக்கரவண்டிகளையே பயன்படுத்துகின்றார்கள். இலங்கையில் 8 இலட்சத்திற்கும் அதிகமாக முச்சக்கரவண்டிகள் உள்ளது. தற்போது பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பு கருதி புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த நாட்களில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது – கல்வி அமைச்சு அ...
கிழக்கில் ஆட்கடத்தலை தடுக்க பொறிமுறை ஒன்று அவசியம் - ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆலோசனை!
பிரதமர் தினேஷ் குணவர்தன – ஐ. நா. சனத்தொகை நிதியத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பியோ ஸ்மித் இடையில் சந...
|
|