முச்சக்கரவண்டி தரிப்பிடங்களை அடையாளப்படுத்த நடவடிக்கை!

Friday, December 14th, 2018

முச்சக்கரவண்டி தரிப்பிடங்களை அடையாளப்படுத்தி அரசிதழ் வெளியிடுதலுடன் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் நலன்கள் மட்டுமல்லாது பயனாளிகளான பயணிகளின் நலன்களிலும் கூடுதல் கவனம் செலுத்தவும் கரைச்சிப் பிரதேச சபையின் 10 ஆவது சபை அமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.

முச்சக்கரவண்டி பயனாளிகளான பயணிகளின் பாதுகாப்பு, கட்டணங்கள் தொடர்பான விடயங்களுடன் போலியான ஆட்டோ தரிப்பிட உரிமை வைத்திருப்போர் மீதும் வாழ்வாதாரத்துக்காக ஏங்கும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

முச்சக்கரவண்டி தரிப்பிடங்களை பயன்படுத்தி அரசிதழ் வெளியிடுதல், கல்லாறு பொதுச் சந்தை வருமானத்தை பெருக்குதல், பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்குதல், தனியார் கல்வி நிலையங்களிடமிருந்து வரி அறவிடுதல் ஆகிய பிரேரணைகளை முன்வைத்து சபை அமர்வு இடம்பெற்றது.

Related posts: