முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் நிவாரணம் வேண்டும் – அரசாங்கத்திடம் கோரிக்கை!

Tuesday, April 14th, 2020

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டத்தால் கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் பலருக்கு உதவுவதற்காக அரசாங்கம் நிவாரணத் திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.

எனினும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எந்த நிவாரணங்களும் இது வரை கிடைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுமார் 11 லட்சத்து 50 ஆயிரம் முச்சக்கரவண்டிகளில் 8 லட்சத்து 50 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

பொது மக்களுக்கு தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் சேவைகளை வழங்கிய முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts: