முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஆப்பு- வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!

Sunday, August 12th, 2018

முச்சக்கரவண்டி செலுத்தும் சாரதி தொடர்பில் புதிய நடைமுறையை அமுல்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் 35 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களாக மாத்திரம் இருக்க வேண்டும் என வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சாரதிகள் 35 வயதிற்கு குறையாமலும் 70 வயதிற்கு அதிகரிக்காமலும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமானதாகும்.

சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட பின்னர் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் வாகனம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கையொப்பத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையான தகுதியுடைய நபர்கள் மருத்துவ சான்றிதழ், குற்றச் செயல்களில் ஈடுபடாதவர் என்பதனை உறுதி செய்த பொலிஸ் அறிக்கை என்பன வழங்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த தகவல்களை மோட்டார் வாகன போக்குவரத்து ஜெனரால் அலுவலகத்திற்கு சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தகுதிகளை பெற்றுக்கொள்ளாத சாரதிகள், முச்சக்கரவண்டி ஒட்டுவதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: