முச்சக்கரவண்டி கவிழ்ந்து கோர விபத்து – யாழ்ப்பாணத்தில் 11 முன்பள்ளிச் சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
Wednesday, June 14th, 2023யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் பாடசாலை சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி முன்பள்ளி சிறுவர்கள் 11 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் முச்சக்கரவண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று புதன்கிழமை காலை முன்பள்ளிச் சிறுவர்களை அதிகளவில் ஏற்றிக்கொண்டு பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கிளிநொச்சி வைத்தியசாலை பரிசோதகர் திடீர் மரணம்!
அமெரிக்க இராஜாங்க உயர் அதிகாரி இலங்கை வருகை!
பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ச...
|
|