முச்சக்கரவண்டிக்கு ஆசனப்பட்டி அறிமுகப்படுத்த நடவடிக்கை!
Sunday, April 17th, 2016நாட்டிலுள்ள முச்சக்கரவண்டிகளுக்கு ஆசனப்பட்டிகளை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கரவண்டிகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் குறித்த யோசனை நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்களின் போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்வோர் தூக்கி எறியப்படுவதால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, இதனை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பட்டியோ அல்லது பொருத்தமான பாதுகாப்பு முறையொன்றையோ செயற்பாட்டு ரீதியில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அறிக்கை தயாரித்து வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.ய
Related posts:
டெங்கு பரவும் வகையில் சூழல் இருந்தால் நடவடிக்கை!
இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி!
சீனாவின் சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்ப...
|
|