முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை!
Friday, June 17th, 2022கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கும் நிலை அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து மற்றும் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுவதாக, கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகள் தொடர்பான பணிப்பாளர் கித்சிறி லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இந்த ஆண்டு இறுதி வரையில் மாத்திரம், குறித்த மாணவர்களை தங்களது இருப்பிடத்துக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை!
சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய கொள்கைத்திட்டங்களை வகுக்க நடவடிக்கை - சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அ...
|
|