முக்கிய சந்திப்பு!

Thursday, November 14th, 2019


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தேர்தல் வாக்களிப்பு, வாக்குகளை எண்ணும் பணிகள் மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவித்தல் என்பன தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வேட்பாளர்கள் தேர்த்ல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று முற்பகல் அழைக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்களால் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாவிடின், அவர்கள் சார்பில், அதிகாரமிக்க இரண்டு பிரதிநிதிகள் ஆணைக்குழுவுக்கு வருகைத்தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வேட்பாளர்களுடன் இறுதி கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2 ஆயிரத்து 500 வாக்குகளை விடவும் அதிகமான வாக்குகள் உள்ள வாக்களிப்பு மையங்கள் 5 உள்ளன.

அவற்றின் வாக்களிப்பு பணிகள், மாலை 5 மணியளவில் நிறைவடையுமா என்ற பிரச்சினை உள்ளது.

இதேநேரம், வாக்குகளை எண்ணும் பணிகளில் 175 பேரும் ஈடுபடுவார்களா? அல்லது எத்தனை பிரதிநிதிகள் குறைக்கப்படுவார்கள் என்பது குறித்து கலந்துரையாட வேண்டும்.

20 பேருக்கும் மேற்பட்டவர்கள் வாக்கு எண்ணும் நிலையங்களில் முகவர்களாக இருப்பார்களாயின் அந்தப் பணிகளில் சிக்கல் நிலை ஏற்படும்.

எனவே, ஆகக்குறைந்தது ஒரு கட்சியில் 5 பேர் என்ற அளவில் இருந்தாலே போதுமானதாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவு அதிகரிக்குமா என்ற அச்சம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேவையான அளவு நிதியை வழங்குவதற்கு திரைசேரி செயலாளர் தயாராக இருககிறார்.இன்று கோரும் நிதி, இன்று வருகிறது. நாளையும், நாளை மறுதினமும் வருகிறது. எனினும், தேர்தலின் பின்னர் செலுத்துவதற்கு நிதி வேண்டும்.

அதனால், நிதியை மிகவும் அவதானத்துடன் செலவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts: