முகாமைத்துவ பயிலுனர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது இலங்கை மத்திய வங்கி!

Wednesday, September 27th, 2023

இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ பயிலுனர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறித்த வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் விண்ணப்பதாரர் ஒரு போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வதுடன், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்க வேண்டுமென இலங்கை மத்திய வங்கி குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணிக்கான பயிற்சி காலம் ஒரு வருடமாகும்.  மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வரிக்கு உட்பட்ட நிலையான கொடுப்பனவாக மாதம் ஒன்றுக்கு ரூ. 125,000/- பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் என்று CBSL மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நல்லூரில் வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் அதிக தொகை நிதி வசூலிப்பு: கண...
கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள்  பொசாசோ துறைமுகத்தை சென்றடைந்தனர்!
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது கொவிட் தடுப்பூசி - கொவிட் தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்ட...