முகாமில் வாழ்பவர்களுக்கு காணிகள் வழங்கப்படும் – யாழ் அரச அதிபர் வேதநாயகன்

யாழ்ப்பாணத்தில் தற்போது வரையில் முகாமில் வாழும் காணி அற்றவர்களில் 55 பேருக்கு காணிகள் வழங்கி அதற்கான உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர் வேதநாயகன் தெரிவித்தார்.
அத்துடன், மேலதிகமாக 15 பேருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உறுதியும் விரைவில் வழங்கப்படும் என மாவட்டச் செயலாளர் வேதநாயகன் தெரிவித்தார். அதேநேரம், மேலும் 43 பேருக்கான காணிகள் மதிப்பீட்டில் உள்ளது. அவை கிடைக்கப் பெற்றதும் உடனடியாக உரிய பயனாளிகளுற்கு வழங்கப்படும். இவ்வாறே, மேலும் 32 காணிகள் நில அளவீட்டில் உள்ளது. இவையும் அடுத்த கட்டமாக மக்களிற்கு வழங்கப்படும்.
இதுவே இந்த காணி விநியோகம் அந்த மக்கள் விரும்பும் இடத்தில் உள்ள காணி ஒரு பரப்பிற்கு 2 லட்சம் ரூபா வீதம் 2 பரப்பு கொள்வனவு செய்ய முடியும். இதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்போதுவரை நிலவும் வறட்சிக்கு தொடர்ந்தும் நீர் விநியோகம் இடம்பெறுகின்றது.
அதேபோன்று வறட்சி நிவாரணத்தின் இரண்டாம் கட்ட விநியோகம் இடம்பெறுகின்றது.
அவ்வாறு இடம்பெறும் நிவாரண விநியோகத்தில் மக்கள் தரம் , நிறை என்பனவற்றை பரீட்சித்து கொள்வனவு செய்ய முடியும். அதில் தரம் அல்லது நிறைச் சோர்வு காணப்பட்டால் உடனடியாகவே முறையிடமுடியும்.
ஏனெனில், தீவகப் பிரதேசத்தில் ஓர் கிளையில் மேற்கொள்ளப்பட்ட விநியோக முறைகேட்டினை உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பணித்துள்ளேன்.
அதேபோன்று எதிர் வரும் ஒக்டோபர் 6முதல் 12 வரை உணவு உற்பத்தி வாரம் ஜனாதிபதி செயலக ஏற்பாட்டில் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதில் தரிசு நிலத்தினை பயிர்ச் செய்கைக்கு உட்படுத்துவது. மற்றும் வருமாணம் ஈட்டும் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல் போன்றன அடங்கும் இந்த வேலைத்திட்டம் அரச நிறுவனங்களிற்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.
Related posts:
|
|