முகமாலை உப தபாலகம் இயங்கவில்லை – மக்கள் சிரமம் !

முகமாலை பகுதியில் உள்ள உப தபாலகம் இது வரை ஆரம்பிக்கப் படாமையினால் குறித்த பகுதி மக்கள் தமது தபாலக தேவைகளுக்காக தொலை தூரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முகமாலை பகுதியில் இயங்கி வந்த உப தபாலகம் யுத்தம் காரணமாக மூடப்பட்டது மீள் குடியமர்வின் பின்னர் கூட இத் தபாலகத்தை மீள இங்கு அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இப் பகுதி மக்கள் தமது தேவைகளை நிறைவு செய்வதற்கு தென்மராட்சி எழுது மட்டுவாழ் பிரதேசத்திற்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. குறிப்பாக முகமாலைப் பகுதியில் இருந்து சுமார் எண்பதிற்கும் மேற்பட்டவர்கள் முகமாலை உப தபாலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டிய மாதாந்த உதவிப்பணக் கொடுப்பனவு தொகையை பெற்றுக் கொள்வதற்கு அதிக பணம் செலவழித்து எழுதுமட்டுவாழ் செல்லும் நிலை தொடர்கின்றது
இவற்றைக் கருத்தில் கொண்டு குறித்த தபாலகத்தை மீளவும் உரிய இடத்தில் இயக்க வைப்பதற்கான ந்வடிக்கை எடுக்கவேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Related posts:
|
|