முகநூல் தொடர்பாக அதிக முறைப்பாடுகள்!

Wednesday, September 28th, 2016

இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தகவலை வெளியிட்டுள்ளது.

இவற்றில் போலியான கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும், முகநூல் கணக்குகளினுள் அத்துமீறி பிரவேசித்து தகவல்களை மாற்றியமைத்தமை தொடர்பிலும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இணையதளத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 face1

Related posts: